Tuesday, 25 September 2012

body smell


பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.
வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.
தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

back pain


8 மாதம் கழித்து இயற்கை உணவு உலகத்தின் அடுத்த படைப்பாக முதுகுவலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கப்போகும் இந்தப்படைப்பை உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான முதுகு வலிக்கு உடனடித் தீர்வு அளிக்க கூடிய வகையில் நம் சித்தர்கள் பாடல் ஒன்று அறியப்பெற்றோம். பாடல் படித்து முடித்த பின் முதுகு வலிக்கு இப்படி ஒரு பயிற்சியா என்று ஆச்சர்யம் தான் மேலிட்டது.
இந்தப்பயிற்சி செய்ய எந்த ஆசிரியரும் ஒரு தேவையில்லை, இதற்கு என்று தனியாக நேரம் எல்லாம் ஓதுக்க வேண்டாம் நாம் தூங்கும் போதே செய்யலாம். இவ்வளவு மணி நேரம் தான் செய்ய வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. எந்த உபகரங்கணளும் தேவையில்லை. நாம் அறியப் பெற்ற பாடலை வைத்து படம் ஒன்று வரைந்தோம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. யாருக்காக இந்தப்பாடல் வருகிறது என்று பார்த்தால் அரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும் , கணக்கு வழக்கு பார்க்கும் நபர்களுக்கும் கூடவே உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்காகவும் இந்தப் பயிற்சியை செய்ய சொல்லியுள்ளனர்.
படம் 1
சோதனை முயற்சியாக முதுகு வலி உள்ள கணினியில் வேலை செய்யும் இரண்டு நபர்களிடம் இந்தப்பயிற்சியை கூறி அவர்களிடம் 9 நாட்கள் கழித்து இதனால் பயன் ஏதும் இருக்கிறாது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கூறினோம். கூடவே ஒரு கண்டிசனும் போட்டோம்  கண்டிப்பாக 9 நாட்களும் தினமும் தவறாது இந்தப் பயிற்சி செய்ய வேண்டும் என்று. அவர்களும் அப்படியே 9 நாட்களும் செய்திருக்கின்றனர். 9 நாட்கள் முடிந்த பின் இரண்டு பேரும் நம்மிடம் தனித்தனியாக தொடர்பு கொண்டு முதுகுவலி சுத்தமாக இல்லை என்றும், சிறிய அளவு வலி கூட இப்போது முதுகில் இல்லை என்றும் கூறினர். விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும், முதுகுவலி உள்ள நபர்கள் இமெயில் மூலம் இந்தப்பயிற்சி எப்படி செய்வது என்று கேட்டால் அவர்களுக்கு இமெயில் மூலம் பதில் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

tooth pain


இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன் வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்,  ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.
பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்
சில நாட்களுக்கு முன்னர் பல்வலிக்கு மருந்து கேட்டு தோழி ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் கூடவே தாம் பல சித்தமருந்துகளை பயன்படுத்திவிட்டேன் பலன் இல்லை உடனடியாக குணமாகும் படி மருந்து இருந்தால் சொல்லுங்கள் என்றார். அகத்தியரின் நூலில் இவரின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று பார்த்ததில் குருவின் அன்பால் மருந்து கிடைத்தது. உடனடியாக தோழிக்கு இமெயிலில் மருந்து பற்றி தெரியப்படுத்தினோம். அதிகாலை 3 மணிக்கு இமெயில் அனுப்பி இருந்தோம் சரியாக 6 மணிக்கு நமக்கு பதில் வந்தது. மருந்து பயன்படுத்திய 10 நிமிடத்தில் வலி நீங்கி உடனடி நிவாரணம் கிடைத்தது என்றார். அத்துடன் ஒரு அன்பான வேண்டுகோளையும் வைத்தார், தயவு செய்து பல்வலிக்கான மருந்தை இமெயில் அனுப்பி பெறக்கூடிய வண்ணம் வைக்க வேண்டாம், பல்வலி வந்தால் ஒருவர் உங்களுக்கு இமெயில் அனுப்பி அது கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அதனால் தளத்தில் தெரியப்படுத்துங்கள் என்றார். இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.
சித்தர்களின் பல அரிய ஆராய்ச்சி விடயங்களை சோதித்து தெரிந்து கொள்ள இயற்கை மருத்துவர்கள் மற்றும் ஆங்கில மருத்துவர்கள் பணம் எதிர்பார்ப்பு இல்லாதவராக இருந்தால் தங்களைப்பற்றிய விபரங்களுடன் naturalfoodworld@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு சித்த ஆராய்ச்சியில் தங்களின் ஒத்துழைப்பை கொடுங்கள்.

urinary stone


சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த
முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும்
இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக
குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான
இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர்.மனிதனை நோயிலிருந்து
குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை
செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை
நாளடைவில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து
விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற
நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம்.
இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும்
நடத்துதலும் எங்களுக்கு தேவை.
பெ.முத்துகிருஷ்ணன்
படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி
சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம்.
கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார்.சிறுநீர்
கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க
முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில்
சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்
என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று
அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக
இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்துக்கொள்லலாம் அதுவரை
இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி
விட்டனர். அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க
முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை
மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது
சிறிய வாழை மரத்தின் பாதியை வெட்டி அதன் நடுவே இருக்கும் (inner layer)
உட்குருத்தை வெட்டி எடுத்து ஒரு குழி போல் ஆக்க வேண்டும்.இதை சூரியன்
மறைந்ததும் சாயங்காலம் வெட்டி வைத்துவிட்டு அதன் மேல் பனிவிழும்படி
இருக்க வேண்டும். வெட்டிய இடத்தின் மேல் ஒரு சல்லடை(Filter) வைத்துவிட
வேண்டும். அதிகாலை 7 மணிக்குள் வெட்டிய இடத்தை பார்த்தால் அந்த இடம்
முழுவதும் வாழைச்சாற்றால் நிரப்பப்பட்டிருக்கும்.
அப்படியே ஒரு உறிஞ்சு குழல் (straw) கொண்டு வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும். அதன் பின் சரியாக 9 மணிக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் அதன்
பின் காலை உணவு சாப்பிடலாம். மேலே நாம் கூறியது போலவே நண்பர்
முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார்.விடியும் வரை
வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு
சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வ்லி
குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி
சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம்
இப்போது இல்லை. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றை
குடிக்க சொன்னோம் அடுத்து மறுபடியும் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து
பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு
அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை இயறக்கையை நேசிக்கும் ஒரு
இயற்க்கைவாசி தான்.

vericos vein


அன்பருக்கு ,

48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் , அத்திக்காயில் இருந்து வெளிவரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். ( மருந்து தடவும் முன் இந்த மருந்து கிடைத்ததற்காக இறைவா உனக்கு நன்றி என்று சொல்லிவிட்டு மருந்து பூசுங்கள் ) தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும் அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ( அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)

முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,

முக்கிய குறிப்பு:

பரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.

தங்கள் அனுபவங்களை மறக்காமல் தெரிவியுங்கள்.

- இயற்கை உணவு உலகம்.

அத்தி


அத்தி 
திரு.அ.சுகுமாரன்

Oct 28, 2009


நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும்  கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது  ஆகும்
அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும் போயதேல்லாம் அத்திப்பழம் சாப்பிடுவதாக வரும் ,.அத்தி பழம் மிக சுவையுடையது போல் பேசப்படும் .

அது அப்போதே என்னக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கும் அத்திப்பழ்தை இப்படி ருசித்து சாப்பிடுகிறார்களே .நமது நாட்டில் இங்ஙனம் அதற்க்கு அத்தனை மதிப்பு இல்லையே என நினைப்பேன்.  அத்தி அராபிய ,ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு விரும்பப்பட்ட கனியாக  இருந்து வந்திருக்கிறது.

அத்தியைப்பற்றி பைபிளில் குறிப்பு இருக்கிறது குரானில் குறிப்பு இருக்கிறது. அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.   நமது மெய்யியல்   அத்தி வலராற்றில் கலந்துள்ளது.

அத்தி. நவக்கிரகங்களில் வெள்ளிக்கிரகத்திற்காக வணங்கப்படும் மரம். அத்தியைப்பற்றி சில சொலவடையும் உண்டு. அத்தி பூத்தாப்போல , அத்திபழத்தை பிட்டுப்பார்த்த்தார்போலா  முதலியவை வழக்கில் இருக்கிறது . 

நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.  நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் கிழித்தக் கொன்றபின், அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு நம்பிக்ககை நிலவி வருகிறது.

அத்தி மரத்தை தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள் உண்டு.

திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

அத்தி மரம் பல வகைப் பட்டது ..  நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி வகைகளும், ஆங்கிலத்தில் (GULAR FIG. COUNTRY FIG. FICUS GLOMERATA, CLUSTER FIG) ஆகிய வகைகளும்  இருக்கிறது .
 

அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும். காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். குளோப் ஜாமூன் அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘அத்தி பூத்தாற்போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

 இருப்பினும், பிற்கால இலக்கியங்கள் கூறும் “பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக்காட்டு “அத்தி, ஆல்” முதலிய மரங்கள் ஆகும் என்பர்.
உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு - கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.
அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.

“அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க” என் நற்றிணையில் காணலாம்.

அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை. இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும்  குறுந்தொகை கூறுகிறது.

அத்தி மரம் FICUS CARCA, FIG TREE, SEEMAI ATHI, ANJEER என்று அழைக்கப்படுகிறது.
அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.
 இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

 உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக  பயன்படுத்தலாம்.
மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

விஞ்ஞானிகள் பழங்களை ஆய்வு செய்து பார்த்ததில் கீழகாணும் சத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.

கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.இவ்வாறு மூலிகை வைத்தியர் அப்துல் கௌஸர் கூறுகிறார்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.   தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.  கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
 இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் - மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

அது என்னமோ நமது இந்து மதத்தில் கடவுளர் ரூபங்கள் செய்து வழிபட அத்தி மரம் பெரிதும் பயன் படுகிறது .

உடுப்பியில் கூட கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .புதுவைக்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற ஊரில் மீனவ  கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக செய்யப்பட்டு வழிபடப் படுகிறது .இதன் வருடாந்திர திருவிழக்கம் பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றவை .பெரும் கூட்டத்தை ஈர்ப்பவை .

நகரேஷி காஞ்சி  எனப்படும் கோவில் நகரமான காஞ்சியில் பெருமாள் கோவிலான வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் அத்திமரத்தால் ஆன வரதாராஜப் பெருமாளை அத்திவரதர் என்றே வழங்குவர். அத்தி பூத்தாற் போல் அவரும் 48 வருஷங்களுக்கு ஒரு முறை 48 நாள்கள் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அப்போது காஞ்சியே மக்கள் வெள்ளத்தில் எம்பெருமானைக் காண திமிலோகப்படும். பெருமானின் உடல் உஷ்ணத்தைக் காக்கவே நீருக்கு அடியில் உள்ளார் என்றும், அவர் அத்திமரத்தினால் ஆன சிலா ரூபம் சூடுதாங்க முடியாது, அதனால்தான் அவர் நீருக்கடியில் இருக்கிறார் என்றும் கூறுவர்.

அதேபோல் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய கிராமம் கோழிகுத்தி. இங்கு அத்திமரமே பெருமாளாக விஸ்வரூபக் காட்சியளிக்கும் ஒரே ஆலயம் வானமுட்டிப் பெருமாள் ஆலயம். பேருக்கு ஏற்றாற் போல் எம்பெருமான் விஸ்வரூபமாக சுமார் 14 அடி உயர அத்திமரக் காட்சி பார்க்கப் பார்க்கப் பரவசம். இக்கிராமத்தின் இயற்பெயர் கோடிஹத்தி பாப விமோசனபுரம் என்பதே ஆகும்.

அத்திப் பழத்திற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும் சக்தி உண்டு. நன்கு பதப்படுத்தப் பட்ட அத்திப்பழம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தி பழம் ஒரு டானிக் மாதிரி ,உடன்பு தேற உடனடி சக்திகள் அதில் ஏராளம் !