நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
அருணகிரிநாதர் (கந்தரலங்கார-ப்பாடல்)
நாள், நட்சத்திரங்கள் என்னை என்ன செய்யும்?
என் கர்மவினைகள் என்னை என்ன செய்யும்?
கோள்கள் என்னை என்ன செய்யும்?
கொடுமையான விதி என்னை என்ன செய்யும்
என்னை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது!
என் கண்முன்னே குமரேசனின் தாளும் (பாதமும்), சிலம்பும், காற்சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் தோன்றிக் கொண்டே இருக்கும். அவன் என்னுடனேயே இருக்கிறான். அவன் பெயரைச் சொல்லி அவனை வணங்கிக்கொண்டே இருக்கிறேன். அதனால் எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை!
No comments:
New comments are not allowed.