Monday, 26 December 2011

ராஜயோகங்கள்

குரு சந்திர யோகம் -

சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும்.

சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும்.

அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும்.

சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும்.

சதுஷ்ர யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும்.

அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும்.

சுபாவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும்.சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம்அமைந்தால் சுபவேசி யோகமாகும்.

1. தர்மகர்மாதிபதி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் இணைந்து காணப்படுவது தர்மகர்மாதிபதி யோகம்.

2. பரிவர்த்தனை யோகம் - எதாவது இரண்டு கிரகம் தத்தம் வீடுகளில் இருந்து மாறி இருக்கும் அமைப்பாகும்.உதாரணமாக : குரு வீட்டில் செவ்வாயும் செவ்வாய் வீட்டில் குருவும் பரிவர்த்தனையாகி காணப்படுவது பரிவர்த்தனை யோகம்.

3. கஜகேசரி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருந்த வீட்டிற்கு 4,7,10 ஆம் வீட்டில் குரு இருந்தால்கஜகேசரி யோகம்.

புத்திர தோஷம் அடிபடும் நிலை ....
லக்னாதிபதி 5 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ , 10 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ பார்த்தாலும் இணைத்தாலும் .......10 க்குடையவர் லக்கினம் மற்றும் லக்னாதிபதியின் இணைவு பார்வை பெற்று இருந்தாலும் .......கர்மகாரரான செவ்வாய் லக்னத்துடன் , 10 ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டால் ......புத்திர தோஷம் அடிபட்டு போவதுடன் கர்மம் செய்வதற்கு ஆண்பிள்ளை தோன்றும் வாய்ப்பு உண்டு .

தந்தை வழியில் திருமணம் ....
ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சூரியன் , ராகு , குரு , சுக்கிரன் ஆகியோர்கள் சம்பந்தம் ஏற்பட்டால் தந்தை வழி உறவில் திருமணம் நடக்கும்.

திருமணம் ...தனது ஜாதியிலா?...வேறு ஜாதியிலா?
வேறு ஜாதியில் திருமணம்.ஒருவரின் ஜாதகத்தில் ராகு , கேது , மாந்தி ஆகியோர் 7 ஆம்இடத்துடன் சம்பந்தபட்டால் அவருக்கு வேறு ஜாதியில்திருமணம் நடக்கும்.தனது ஜாதியில் திருமணம் .குரு , புதன் , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அல்லது அவர்கள் சாரம் பெற்ற கிரகங்கள் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் தனது ஜாதியில் திருமணம் நடக்கும்.

கிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....
நட்பு வீடுகள் .சூரியன் - விருச்சிகம் , தனுசு , கடகம் , மீனம் .சந்திரன் - மிதுனம் , சிம்மம் , கன்னி .செவ்வாய் - சிம்மம் , தனுசு , மீனம்புதன் - ரிஷபம் , துலாம் , சிம்மம்.குரு - மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம்.சுக்ரன் - மிதுனம் , தனுசு , மகரம் , கும்பம் .சனி - ரிஷபம் , மிதுனம்.ராகு , கேது - மிதுனம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் , மகரம்.பகை வீடுகள்.சூரியன் - ரிஷபம் , மகரம் , கும்பம் .சந்திரன் - எல்லா வீடுகளும் நட்பு . ( பகை வீடுகள் கிடையாது )செவ்வாய் - மிதுனம் , கன்னி .புதன் - கடகம் , விருச்சிகம் .குரு - ரிஷபம் , மிதுனம் , துலாம் .சுக்ரன் - கடகம் , சிம்மம் .சனி - கடகம் , சிம்மம் , விருச்சிகம் .ராகு , கேது - கடகம் , சிம்மம .

No comments:

Post a Comment