Thursday, 15 December 2011


திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக்கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.

செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு. அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.

பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல மாற்றம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல, இப்பவும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்னமும் ஆண் குழந்தை மோகம் நம் நாட்டில் தீரவே இல்லை. அதுபோல வந்து கேட்பவர்களுக்கும் திருச்செந்தூரைத்தான் சொல்கிறோம்.

அதே மாதிரி, கர்ம வினைகள் இருக்கிறதல்லவா, அதாவது ஊழ்வினைப் பயன், அதனை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.

சூரனை சம்ஹாரம் செய்கிறார் என்று சொன்னால், நம்மிடத்தில் இருக்கக்கூடிய சூரத்துவம் போன்றவற்றை ஒவ்வொன்றாக போக்கக் கூடிய இடம். கர்ம வினைகளையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. அதனை அந்த முருகன்தான் தீர்க்க முடியும்.

இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முதன்மையான இடம். அதனைக் கண்கூடாக எவ்வளவோ மக்கள் அனுபவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment